Saturday, June 26, 2010

நன்றாகத் தேர்வு எழுதுவது எப்படி?

மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். தேர்வை எப்படி எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.


தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது.

எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை.

இரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.

தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அதைப் படித்தாயா? இதைப் படித்தாயா? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் பக்கமே போகாதீர்கள்.

தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் "ரிலாக்ஸ்' செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துச் சிறிது சிறிதாக வெளியே விடுங்கள். மனத்தை உங்கள் மகிழ்ச்சியான அனுபவத்துக்கு இட்டுச் செல்லுங்கள்.

"என்னால் மிக நன்றாகத் தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது' என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.

குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.

முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.

எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.

கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.

கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.

ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். நன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் உங்கள் விடைத்தாளை ஆசிரியரிடம் காட்டி ஆலோசனை பெறுங்கள். விடைகளில் அவசியமில்லாத வார்த்தைகள் உள்ளனவா? எங்கு கவனக்குறைவால் தவறு ஏற்பட்டுள்ளது? ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் அடிக்கோடு இட்டுள்ளீர்களா? குறைந்த நேரத்தில் எவ்வளவு சுருக்கமாக விடையளிக்கலாம்? என்பது குறித்து ஆசிரியரிடம் அறிவுரை கேளுங்கள்.

கேள்விகளுக்கு விடைகளை எழுதிப்பார்ப்பது அதிக மதிப்பெண் பெற உதவும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடித்த பிறகு அதில் என்ன சிறப்பு, குறை என்ன என்று ஆராய்வது அக்காரியத்தை மீண்டும் சிறப்பாகச் செய்ய உதவும். இது ஓர் உளவியல் உத்தி.

Wednesday, June 9, 2010

தலைமைப் பண்புக்கான தகுதிகள்

  இன்றைய இளைஞர்கள் பலர் மிக்க திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். கை நிறையச் சம்பளம், கார் என பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய இளைஞர்களிடம் குறைவாக உள்ளது. தலைமை ஏற்பது என்றால் ஏதோ அரசியல் கட்சிக்கு தலைமையேற்பது என்று அர்த்தமல்ல.

ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரு இரவில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது என்கிறார் தனியார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவர்.

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்:

நல்ல பேச்சாற்றல்: தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும்.

நேர்மை: தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவாரக இருக்க வேண்டும்.

மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.

தொலைநோக்குப் பார்வை: தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

செயல் திறன்: ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

நல்லவர்களை அடையாளம் காணும் பண்பு: தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.

இலக்கை அடைய ஊக்குவித்தல்: நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

விமர்சனங்களை ஏற்கும் பக்குவம்: நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

நிலைத்ததன்மை: வழக்கமான செயல்களில் நிலைத்ததன்மை இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

Friday, June 4, 2010

Ten Most Important Tips to Improve the Quality of Your Work Life

We all desire a work experience that can fit neatly with our personal lives. We all seek balance. Too often however peoples' work life overpowers the rest of their life. And when that happens, we can very easily find ourselves struggling to keep up in all areas of our lives.

The following ten tips are designed to get you thinking. They apply as much to the CEO as they do to the front line worker:

1)Have a personal vision of who you want to be and what you want to do - keep in mind that if you do not have one for yourself, you will likely become part of someone else's vision!

2)Test out your own personal vision with that of your organization's - in how many ways do they support each other? Ask questions to better understand your organization's mission, vision and values.

3)Learn, and keep on learning - go to training sessions and in-services, enroll in college courses, read books. Know why, not just how.

4)Buddy-up - find ways to share the load with other team members. Sharing the load makes work easier to manage and less stressful.

5)Share your successes - this allows you to learn from the successes of others, as well as giving you a boost when you need

6)Get it off your chest - talk things over with your buddy, friend, supervisor when things trouble you, don't keep it bottled up inside.

7)Find joy in being of service to others - think about how the person you are serving is better off as a result of your work, and rejoice in that knowledge.

8)Take time for breaks - pay particular attention to the need to refresh body, mind and spirit.

9)Try out new ideas - to innovate is to grow. By using your creativity and innovation life becomes exciting and fulfilling.

10)Have fun at work - laughter is the best medicine, but use only appropriate humor. Damaging someone else's self-esteem for the fun of it is no laughing matter.